தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசியை ஒளிரச் செய்தல் - புனித நகரத்தின் பொலிவான எதிர்காலம்

Posted On: 13 APR 2025 6:58PM by PIB Chennai

"இந்தியா இப்போது வளர்ச்சி, பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாக முன்னெடுத்துச் செல்கிறது. நமது காசி இதற்கு சிறந்த முன்மாதிரியாக மாறி வருகிறது."

--பிரதமர் நரேந்திர மோடி

காசி என்பது ஒரு நகரம் மட்டுமல்ல. அது ஒரு பாரம்பரியத்தின் ஆன்மா. கங்கையின் சிற்றலைகளையும், அதன் மக்களின் அமைதியான வலிமையையும் அது சுவாசிக்கிறது. இங்கே, பழங்காலக் கல்வெட்டுகள் கடந்த காலத்தின் கதைகளைச் சொல்கின்றன. அதே நேரத்தில் கண்ணாடி கட்டடங்கள் நவீன காலத்தையும் எதிர்காலத்தையும் பிரதிபலிக்கின்றன. மணிகர்னிகா படித்துறையில் வாழ்வும் சாவும் சந்திக்கும் நகரம் இப்போது பரந்த சாலைகள், நவீன விளக்குகளுடன் வரவேற்கிறது. காசியில் புனிதமும். ஒவ்வொரு தெருவும் ஒரு கதையை வைத்திருக்கும் இடம் காசி.

2025:ஏப்ரல் 11 அன்று, பண்டைய நகரமான காசி ஒரு முன்னேற்றத்தின் மற்றொரு தருணத்தைக் கண்டது. வாரணாசியில் ₹ 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிப் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு, வாரணாசி வழியாக ஒரு பயணம் என்பது சிக்கலான போக்குவரத்தையும் தூசி நிறைந்த மாற்றுப்பாதைகளையும் கொண்டிருந்தது. இன்று நகரம் அந்தக் கதையை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. புல்வாரியா மேம்பாலம், சுற்றுச் சாலை போன்ற திட்டங்கள் போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்து, தினசரி லட்சக்கணக்கான யாத்ரீகர்களின் விலைமதிப்பற்ற நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. ஜான்பூர், காசிப்பூர், பல்லியா, மாவ் போன்ற மாவட்டங்களுக்கிடையேயான பயணம் முன்பை விட வேகமாகவும், எளிமையாகவும் வசதியாகவும் மாறியுள்ளது.

வாரணாசியின் வளமான கலாச்சாரம் சர்வதேச புகழ் பெற்று வருகிறது. வாரணாசி, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட உள்ளூர் தயாரிப்புகள் இப்போது மதிப்புமிக்க புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளன. 

வாரணாசி பாரம்பரியத்துடன் வளர்ச்சியை ஏற்படுத்தும் இணைப்பில் உள்ள, இந்த நகரம் ஒரு எளிய உண்மையை நிரூபிக்கிறது. அதாவது ஒரு இடத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கும்போதும் வளர்ச்சி மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கூப்பிய கரங்களுடனும், உறுதியான தீர்மானத்துடனும், காசி முன்னோக்கி நகர்கிறது. அதன் கடந்த காலத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. அதே நேரத்தில் சிறந்த எதிர்காலத்திற்குத் தயாராகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121462

 

https://x.com/narendramodi/status/1766504020967879025

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2120875&reg=3&lang=1

 

 

****

PLM/DL


(Release ID: 2121480) Visitor Counter : 26