பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பத்மஸ்ரீ ராம்சஹாய் பாண்டே மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 09 APR 2025 4:58PM by PIB Chennai

புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர் பத்மஸ்ரீ ராம்சஹாய் பாண்டே மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

"புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர் பத்மஸ்ரீ ராம்சஹாய் பாண்டே அவர்களின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். தமது அற்புதமான கலைத்திறனாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கடின உழைப்பாலும், அவர் புந்தேல்கண்டின் நாட்டுப்புற நடனத்திற்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்தார். அவரது மறைவு நாட்டின் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் கடவுள் மன உறுதியை அளிக்கட்டும். ஓம் சாந்தி!"

***

(Release ID: 2120433)

TS/PLM/AG/RR


(Release ID: 2120489) Visitor Counter : 24