மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு என்பது புதிய தொழில் புரட்சி என்று மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது குறித்த யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு பங்குதாரர்களை வலியுறுத்தினார்
Posted On:
08 APR 2025 7:03PM by PIB Chennai
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநிலங்கள் உள்ளிட்ட கூட்டாளர்களுடன் ஒரு நாள் பங்குதாரர்கள் சந்திப்பை நிறைவு செய்து ஆதாரைப் பயன்படுத்தி சேவை வழங்கலை மேலும் மேம்படுத்துவதற்கான யோசனைகளைப் பகிர்ந்து கொண்டது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'ஆதார் சம்வாத்' நிகழ்ச்சியில் சுமார் 750 மூத்த கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு ஒரு புதிய தொழில்துறை புரட்சியைப் போன்றது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். வளர்ச்சியை மேலும் அதிகரிக்க செயற்கை நுண்ணறிவை டி.பி.ஐகளுடன் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்த யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் பங்குதாரர்களைக் கேட்டுக்கொண்டார். அதே வேளையில் இவை அனைத்தும் தனியுரிமையைப் பாதுகாக்கும், என்று அவர் மேலும் கூறினார்.
வாழ்க்கையை மேலும் எளிதாக்குவதை மேம்படுத்துவதில் மத்திய அரசு முதன்மை கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் கூறினார். இந்தச் சூழலில் ஆதாரின் முகம் சரிபார்ப்பு முறையை உதாரணம் காட்டிய அவர், அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2120162
******
RB/DL
(Release ID: 2120222)
Visitor Counter : 50