நிதி அமைச்சகம்
நான்காம் கட்ட ஒருங்கிணைப்பில் 26 மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைக்க நிதிச் சேவைகள் துறை அறிவிப்பு
Posted On:
08 APR 2025 2:31PM by PIB Chennai
ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி என்ற கொள்கையின் அடிப்படையில் 26 மண்டல ஊரக வங்கிகள் ஒன்றிணைக்கப்படும் என்று நிதிச் சேவைகள் துறை அறிவித்துள்ளது. இது மண்டல ஊரக வங்கிகளின் ஒருங்கிணைப்பின் நான்காவது கட்டமாகும்.
கடந்த காலங்களில் ஒருங்கிணைப்புகள் காரணமாக மண்டல ஊரக வங்கிகளின் செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, நிதி அமைச்சகம் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிப்பதற்காக 2024 நவம்பரில் ஒரு ஒருங்கிணைப்புத் திட்டத்தை வெளியிட்டது. பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 26 மண்டல ஊரக வங்கிகள் ஒருங்கிணைக்கும் பணி அளவீட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் செலவை நியாயப்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.தற்போது, 26 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 43 மண்டல ஊரக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இணைப்புக்குப் பிறகு, 700 மாவட்டங்களை உள்ளடக்கிய 26 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 28 மண்டல ஊரக வங்கிகள் 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்படும். அவை முதன்மையாக கிராமப்புறங்களில் செயல்படுகின்றன. சுமார் 92% கிளைகள் கிராமப்புற / சிறிய நகர்ப்புறங்களில் உள்ளன.
இது நான்காவது கட்ட இணைப்பாகும். இதற்கு முந்தைய 3 கட்டங்களில் கட்டம்-I இல் (2006 நிதியாண்டு முதல் 2010 நிதியாண்டு வரை) மண்டல ஊரக வங்கிகளின் எண்ணிக்கை 196 லிருந்து 82 ஆகவும், கட்டம்-2 (2013 நிதியாண்டு முதல் 2015 நிதியாண்டு வரை) இல் மண்டல ஊரக வங்கிகளின் எண்ணிக்கை 82-லிருந்து 56 ஆகவும், கட்டம்-3 (2019 நிதியாண்டு முதல் 2021 நிதியாண்டு வரை)இல் மண்டல ஊரக வங்கிகளின் எண்ணிக்கை 56- லிருந்து 43 ஆகவும் குறைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120016
***
IR/RJ/KR
(Release ID: 2120026)