பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
இருவாரகால ஊட்டச்சத்து இயக்கம் ஏப்ரல் 8-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டாடப்பட உள்ளது
Posted On:
07 APR 2025 3:18PM by PIB Chennai
நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைவதில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஊட்டச்சத்து இயக்கத்தின் 7-வது பதிப்பை 2025 ஏப்ரல் 8-ம் தேதி முதல் 22ம் தேதிவரை கொண்டாட உள்ளது.
இந்த ஆண்டுக்கான இருவார கால ஊட்டச்சத்து இயக்கம் நான்கு முக்கியக் கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், ஊட்டச்சத்து குறைபாடு குறித்த சமூக மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளவும், குழந்தைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கான தீர்வு காணவும், சுகாதாரமான வாழ்வியல் முறைகளை உருவாக்கும் வகையில் குழந்தையின் வாழ்வில் முதல் 1000 நாட்கள் மீது முழு கவனம் செலுத்த இந்த இருவார கால இயக்கம் வகை செய்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக இந்த இயக்கம் பிரதமரால் தொடங்கப்பட்ட முன்னோடி திட்டமான ஊட்டச்சத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விளைவுகள் குறித்தும், ஊட்டச்சத்து மூலம் சுகாதாரத்தை பேணுவதற்கான வழிவகைகள் குறித்தும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த இருவார கால நிகழ்ச்சியின் தொடக்கமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், 18 அமைச்சகங்களின் அதிகாரிகள், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரிடையே இணையவழியில் கலந்துரையாடுகிறார். நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ள கலந்துரையாடலுக்கான இணைப்பு:
https://webcast.gov.in/mwcd
அருணாச்சலப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை ஆய்வு செய்வதற்காக இந்த இருவார கால நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119756
***
TS/SV/LDN/KR
(Release ID: 2119785)
Visitor Counter : 20