பிரதமர் அலுவலகம்
இலங்கையில், இந்திய நிதியுதவியுடன் கூடிய ரயில் கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
Posted On:
06 APR 2025 12:09PM by PIB Chennai
அநுராதபுரத்தில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட இரண்டு ரயில் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் இலங்கை அதிபர் திரு அநுரகுமார திசநாயக, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் இன்று கலந்துகொண்டனர்.
91.27 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட 128 கிலோ மீட்டர் நீளமுள்ள மஹோ-ஓமந்தை ரயில் பாதையை இரு தலைவர்களும் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து 14.89 அமெரிக்க டாலர் இந்திய நிதி உதவியுடன் கட்டப்படும், மாஹோவிலிருந்து அனுராதபுரம் வரையிலான மேம்பட்ட சமிக்ஞை அமைப்பின் கட்டுமானத்தையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்திய-இலங்கை வளர்ச்சிக்கான ஒத்துழைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த ரயில்வே நவீனமயமாக்கல் திட்டங்கள் இலங்கையில் வடக்கு-தெற்கு ரயில் இணைப்பை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளன. இது இலங்கை முழுவதும் பயணிகள் போக்குவரத்தையும், சரக்குப் போக்குவரத்தையும் விரைவாகவும், சிறப்பாகவும் மாற்றுவதற்கும் உதவும்.
***
PLM/ RJ
(Release ID: 2119504)
Visitor Counter : 40
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam