வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செய்தி குறிப்பு

Posted On: 03 APR 2025 2:13PM by PIB Chennai

அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள எதிரீடான வரிகள் விதிப்பது குறித்த நிர்வாக உத்தரவு காரணமாக வர்த்தக  கூட்டாளிகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்றவாறு  வரி விகிதங்கள் 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை உயரும். 10 சதவீதத்தை அடிப்படை வரி விகிதமாக கொண்ட இந்த நிர்வாக உத்தரவு 2025 ஏப்ரல் 05 முதல் நடைமுறைக்கு வரும். குறிப்பிட்ட மற்ற சில நாடுகளுக்கான மதிப்புக்கு ஏற்ற வரி என்ற நடைமுறை 2025 ஏப்ரல் 09 முதல்  அமலுக்கு வரும்.  இந்தியப் பொருட்கள் மீதான கூடுதல் வரி, நிர்வாக உத்தரவின்படி 27 சதவீதம் ஆகும்.

அமெரிக்க அதிபரால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் / பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து மத்திய வர்த்தகத்துறை கவனமாக ஆய்வு செய்து வருகிறது.  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை கவனத்தில் கொண்டு  இந்திய  தொழில்துறை, ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து வரிகள் குறித்த அவர்களின் மதிப்பீட்டுக்கான பின்னூட்டத்தை அறிவதுடன், நிலைமையை மதிப்பீடும் செய்துவருகிறது. அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் ஏற்பட்டுள்ள  புதிய போக்குகள் காரணமாக உருவாகும் நிலைமைகள் குறித்தும் இந்தத் துறை ஆய்வு செய்துவருகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப்பும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்காக்குவதை  நோக்கமாகக் கொண்ட மிஷன் 500 என்பதை அறிவித்திருந்தனர்.  அதன்படி, பரஸ்பரம்  நன்மை பயக்கின்ற, பல துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதிசெய்ய, இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகக் குழுக்களின் விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.  எனவே இந்தப் பிரச்சனைகள்  மீது  டிரம்ப் நிர்வாகத்துடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. வரும் நாட்களில் இது அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118182

***

TS/SMB/AG/SG

 

 

 

 


(Release ID: 2118291) Visitor Counter : 30