குடியரசுத் தலைவர் செயலகம்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து
Posted On:
30 MAR 2025 7:14PM by PIB Chennai
ரமலான் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புனித ரமலான் மாதத்தில் ஈத்-உல்-ஃபித்ர், நோன்பு மற்றும் பிரார்த்தனையின் முடிவைக் குறிக்கிறது. இந்தப் பண்டிகை சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் இரக்க உணர்வை வலுப்படுத்துகிறது. இந்தப் பண்டிகை சமூக பிணைப்பை ஊக்குவிப்பதோடு, நல்லிணக்கமான, அமைதியான, வளமான சமுதாயத்தை உருவாக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது. ஈத் என்பது பச்சாத்தாபம், இரக்கம் மற்றும் தொண்டு ஆகியவற்றின் உணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்.
இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேறிச் செல்ல நமக்கு வலிமையை அளிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116873
****************
BR/KV
(Release ID: 2116996)
Visitor Counter : 23