புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
‘’இந்திய எரிசக்தி புள்ளியியல் 2025’’ தரவுத்தொகுப்பு வெளியீடு
Posted On:
29 MAR 2025 9:49AM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், ‘’இந்திய எரிசக்தி புள்ளியியல் 2025’’ என்னும்
வருடாந்திர தரவுத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடு அமைச்சகத்தின் www.mospi.gov.in இணையதளத்தில் கிடைக்கிறது.
இந்தியாவின் அனைத்து எரிசக்தி பொருட்களின் (நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்றவை) இருப்பு, திறன், உற்பத்தி, நுகர்வு மற்றும் இறக்குமதி / ஏற்றுமதி பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தரவுத்தொகுப்பை இந்த வெளியீடு கொண்டுள்ளது. இந்த வெளியீட்டில் பல்வேறு அட்டவணைகள் (ஆற்றல் சமநிலை போன்றவை), வரைபடங்கள் (சாங்கி வரைபடம் போன்றவை) மற்றும் சர்வதேச தரங்களின்படி நிலையான ஆற்றல் குறியீடுகள் உள்ளன.
தற்போதைய வெளியீடு சுற்றுச்சூழல் பொருளாதார கணக்கீட்டு முறைமை 2012 கட்டமைப்பைப் பின்பற்றி எரிசக்தி கணக்கு பற்றிய ஒரு புதிய அத்தியாயத்தைக் கொண்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
• 2023-24 நிதியாண்டில், உலகளாவிய பெருந்தொற்றின் அதிர்ச்சியை சமாளித்து, 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கான கனவை நிறைவேற்றுவதன் மூலம் எரிசக்தி விநியோகம் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிலும் இந்தியா நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது.
• இந்திய பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் ஒரு ஆரோக்கியமான விரிவாக்கத்தை சித்தரித்துள்ளது, மொத்த முதன்மை ஆற்றல் வழங்கல் கடந்த ஆண்டில் 7.8% வளர்ச்சியைப் பதிவு செய்து 9,03,158 கிலோ டன் எண்ணெய்க்கு சமமான அளவாக இருந்தது.
• புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான மிகப்பெரிய ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது, இது 31-மார்ச்-2024 நிலவரப்படி 21,09,655 மெகாவாட்டாக உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி மூலம் 11,63,856 மெகாவாட் (சுமார் 55 சதவீதம்), சூரியசக்தி (7,48,990 மெகாவாட்) மற்றும் புனல் மின்சாரம் (1,33,410) உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான திறனில் பாதிக்கும் மேற்பட்டவை ராஜஸ்தான் (20.3%), மகாராஷ்டிரா (11.8%), குஜராத் (10.5%) மற்றும் கர்நாடகா (9.8%) ஆகிய நான்கு மாநிலங்களில் குவிந்துள்ளன.
• புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து மின்சாரத்தை (பயன்பாடு மற்றும் பயன்பாடு அல்லாதவை உட்பட) உற்பத்தி செய்வதற்கான நிறுவப்பட்ட திறனும் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 31-Mar-2015 நிலவரப்படி 81,593 மெகாவாட்டிலிருந்து, 31-Mar-2024 நிலவரப்படி 1,98,213 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது, இது ஆண்டுகளில் 10.36% வளர்ச்சி ஆகும்.
• புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து (பயன்பாடு மற்றும் பயனல்லாத இரண்டும் சேர்ந்து) மொத்த மின்சார உற்பத்தியும் பல ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது. 2014-15 நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 2,05,608 ஜிகாவாட் மின்சாரம், 2023-24 நிதியாண்டில் 3,70,320 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது, இது ஆண்டுகளில் 6.76% வளர்ச்சி ஆகும்.
• பல ஆண்டுகளாக தனிநபர் எரிசக்தி நுகர்வில் இந்தியா கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது 2014-15 நிதியாண்டில் 14,682 மெகா ஜூல்-லில் இருந்து 2023-24 நிதியாண்டில் 18,410 மெகா ஜூல் ஆக உயர்ந்துள்ளது, இது பல ஆண்டுகளாக 2.55% வளர்ச்சி ஆகும்.
• மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தினால் ஏற்படும் இழப்புகள் குறைக்கப்பட்டதன் மூலம் மின்சாரத்தின் பயன்பாடு கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் 23% ஆக இருந்த மின் பகிர்மானம் மற்றும் விநியோகம் தொடர்பான இழப்பு 2023-24 நிதியாண்டில் சுமார் 17% ஆக குறைந்துள்ளது.
• அனைத்து முக்கிய இறுதி பயன்பாட்டு எரிசக்தி நுகர்வு துறைகளில், தொழில்துறை , 2023-24 நிதியாண்டில் அதிகபட்ச விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. வணிகம் மற்றும் பொதுப்பணி, குடியிருப்பு, வேளாண்மை மற்றும் வனவியல் போன்ற அனைத்து பிற துறைகளும் இதே காலகட்டத்தில் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
***
PKV/KV
(Release ID: 2116547)