சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
வளரிளம்பருவ ஊட்டச்சத்து குறித்த தேசிய அளவிலான ஆலோசனை
प्रविष्टि तिथि:
28 MAR 2025 3:28PM by PIB Chennai
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், இந்திய பொது சுகாதார அறக்கட்டளை , யுனிசெப் - இந்தியா தலைமையில் வளரிளம்பருவத்தினரிடையே ஊட்டச்சத்து குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வளரிளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் உடல் எடை, உடல் பருமன் போன்ற அவர்களது உணவுச் சூழலைப் பாதிக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கொள்கைகள், ஊட்டச்சத்து தொடர்பான கல்வி அறிவு நிதி ஆதாரங்கள், போன்றவை குறித்து நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாஹல் ஆகியோர் ஊட்டச்சத்துக்கான தேசிய இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் பாரதி குல்கர்னி முன்னிலையில் வெளியிட்டனர்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் வி.கே.பால் "இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் உடல் எடை, உடல் பருமன் போன்ற சூழல் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவற்றுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் நாட்டின் பொது சுகாதாரம், பொருளாதார உற்பத்தித்திறன் ஆகியவற்றில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116146
****
SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2116245)
आगंतुक पटल : 45