பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டத்திற்கு 3-ம் கட்டமாக விண்ணப்பதாரர்களை தேர்வு செய்த பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAR 2025 12:54PM by PIB Chennai
முந்தைய அமர்வுகளின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் 2025 மார்ச் 27-ம் தேதியன்று பிற்பகல் 3:00 மணி முதல் 4:45 மணி வரை பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டத்திற்கு மூன்றாம் கட்டமாக விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த அமர்வில் 684-க்கும் மேற்பட்டோர் நேரடியாக பங்கேற்றனர். ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் திறமையான விவாதத்தை உறுதி செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்கள் கேள்விகளை முன்கூட்டியே ஒரு பிரத்யேக ஆன்லைன் வழியே சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். இது மின்னஞ்சல் வழியாக பகிரப்பட்டது. ஆன்லைன் இணைப்பு மூலம் சமர்ப்பிக்கப்பட்ட 1,765 க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டக்குழு உறுப்பினர்களால் நேரடியாக பதிலளிக்கப்பட்டன. கேள்விகள் முக்கியமாக துறை சார்ந்த வாய்ப்புகளையொட்டி அமைந்திருந்தன.
இந்த அமர்வில் பங்கேற்ற மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன வேளாண் பிரிவு திறன் மேம்பாடு மற்றும் கல்விப் பிரிவின் தலைவரும், தொழில்துறை நிபுணருமான திரு. டான் லூயிஸ், தொழில் உருவாக்க உத்திகள் மற்றும் தொழில்முறை வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார். தொழில்துறை தலைவர்களிடம் நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கும் இளைஞர்களுக்கு வெளிப்படையான மற்றும் அணுகக்கூடிய தளத்தை வழங்குவதற்காக பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டத்தை அவர் பாராட்டினார்.
இந்த திட்டத்தின் கீழ், ஏற்கனவே பயிற்சி பெற்ற ஸ்வேதா ஜோஷி, அங்கித் குமார் மற்றும் வித்யாசாகர் பாட்டீல் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116079
***
GK/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2116102)
வருகையாளர் எண்ணிக்கை : 66