சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலைகள் பராமரிப்பும் போக்குவரத்து மேலாண்மையும்

Posted On: 27 MAR 2025 2:54PM by PIB Chennai

தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை பராமரிப்பதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதுடன், அனைத்து தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்பை உறுதி செய்வதற்கான வழிமுறையை, பொறுப்பான பராமரிப்பு முகமை மூலம் உருவாக்கியுள்ளது.

வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டது முதல் ஒப்பந்த காலம் முடியும் வரை அது தொடர்பான பணிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் பொறுப்பாகும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் மீதமுள்ள அனைத்து பிரிவுகளுக்கும் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் அல்லது குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது .

நாட்டில் போக்குவரத்து மேலாண்மையை உறுதி செய்வதற்காக போக்குவரத்து விதிகளை அமலாக்குவதை வலுப்படுத்தும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் அரசு அவ்வப்போது திருத்தங்களைக் கொண்டு வருகிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு வழி, அதற்கு மேல் உள்ள பகுதிகளில் நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நிறுவும் பணியையும் அரசு மேற்கொண்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத்  தகவலைத் தெரிவித்தார்.

----

(Release ID 2115684)

TS/PLM/KPG/KR


(Release ID: 2115767) Visitor Counter : 43