பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பிரதமரின் பணிஅனுபவப் பயிற்சித் திட்டத்தை பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நடத்தவுள்ளது
Posted On:
26 MAR 2025 2:38PM by PIB Chennai
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் 2025 மார்ச் 27-ம் தேதி பிரதமர் பணி அனுபவப் பயிற்சித் திட்டத்துக்கான விண்ணப்பதாரர்களுக்கு முன்கூட்டிய சந்தேகம் தெளிதல் அமர்வை நடத்தவுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உதவும் அமைச்சகத்தின் கடப்ப்பாட்டின்கீழ் நடத்தப்படும் இந்த அமர்வில் விண்ணப்பதாரர்களின் முக்கியமான கேள்விகளுக்கு நிகழ்நேர பதில்கள் அளிக்கப்படும். வாரந்தோறும் நடைபெறும் அமர்வில் விண்ணப்பதாரர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் பணி அனுபவங்கள், தொழில் உருவாக்க உத்திகள், தொழில்முறை பயிற்சி ஆகியவற்றின் மதிப்புக் குறித்து விரிவான வழிகாட்டுதலும் வழங்கப்படும். இதற்கென தொழில்துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏற்கனவே நடைபெற்ற உள்ளகப் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்தவர்கள் தங்களது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டத்தினால் ஏற்படும் பயன்கள் குறித்த கண்ணோட்டத்தையும் இந்த அமர்வு வழங்கிடும்.
இந்த அமர்வின்போது நடைபெறும் விவாதத்தில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் தங்களது கேள்விகளை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது பிரத்யேக இணையதள இணைப்பு மூலமாகவோ முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். அதே சமயம் பங்கேற்பாளர்கள் நேரடியாகவும் கேள்விகளை எழுப்பி உரிய பதிலைப் பெறுவதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115186
-----
TS/SV/KPG/KR
(Release ID: 2115298)
Visitor Counter : 25