நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை
Posted On:
26 MAR 2025 1:01PM by PIB Chennai
நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் சுற்றுச்சூழல் தன்மையை மேம்படுத்தும் வகையில் மரம் நடுதல் / பல்லுயிர் மீட்பு, சமூக பயன்பாட்டிற்காக சுரங்க நீர் பயன்பாடு, சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்குதல் மற்றும் எரிசக்தி திறன் நடவடிக்கைகளை பின்பற்றுதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஒப்பந்ததாரர், அதிகாரிகளுக்கு இடையே வர்த்தக ரீதியிலான சுரங்க நடவடிக்கைகள் நிலக்கரி தொகுதி மேம்பாடு மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம், ஏலநடைமுறைகள் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிலக்கரி சுரங்கத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரி பிரித்தெடுத்தல், போக்குவரத்து, வெளியேற்றம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும். நிலக்கரி சுரங்கத்தின் செயல்பாடுகளை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115159
**
TS/SV/KPG/KR
(Release ID: 2115207)
Visitor Counter : 28