மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
“குழந்தைப் பருவக் கவிதை முன்முயற்சி”யை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது; இளம் சிறார்களுக்கான பாரதிய பாடல்கள் / கவிதைகளை மீட்டெடுத்தல்
Posted On:
25 MAR 2025 6:21PM by PIB Chennai
“குழந்தைப்பருவக் கவிதை முன்முயற்சி”யை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இளம் சிறார்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கான பாடல்கள் / கவிதைகளை மீட்டெடுப்பது இதன் நோக்கமாகும்.
இதற்காக மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மைகவ் இணைய தளத்துடன் இணைந்து போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்போர் பிரபலமான, தற்போது புழக்கத்தில் உள்ள பாடல்களை (எழுதியவரின் பெயர் குறிப்பிட்டு) அல்லது புதிதாக இயற்றிய பாடல்களை அனுப்பி வைக்கலாம்.
தொடக்க நிலைக்கு முந்தையது (3 முதல் 6 வயது) முதல் நிலை (6 முதல் 7 வயது) இரண்டாம் நிலை (7 முதல் 8 வயது) என 3 வகைமைகளில் போட்டி நடத்தப்படும். ஆங்கிலத்திலும், இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்களை / கவிதைகளை அனுப்பி வைக்கலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இந்தப் போட்டி 26.03.2025 முதல் 22.04.2025 வரை மைகவ் இணையதளத்தில் (https://www.mygov.in/ ) நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114973
----
TS/SMB/KPG/DL
(Release ID: 2115036)
Visitor Counter : 34