மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பெங்களூரில் 'நானோ எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான விளக்கக் கூட்டம் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மார்ச 27 அன்று நடத்துகிறது

Posted On: 24 MAR 2025 2:56PM by PIB Chennai

குவாண்டம் தொழில்நுட்பம், நியூரோமார்ஃபிக் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் உள்நாட்டு நானோ எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் முன்னேற்றங்களை எடுத்துரைக்கும் வகையில் விளக்கக் கூட்டத்திற்கும் கருத்தரங்கிற்கும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒன்றிணைப்பதற்கும், புதுமையை வெளிப்படுத்துவதற்கும், தற்சார்பு இந்தியாவிற்கான முதலீடுகளை அதிகரிப்பதற்கும் இந்த  விளக்கக் கூட்டம் 2025 மார்ச் 27 அன்று பெங்களூரில் நடத்தப்படுகிறது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நானோ தொழில்நுட்ப முன்முயற்சிகள் பிரிவு, ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, ஐஐடி தில்லி,  ஐஐடி காரக்பூர், ஐஐடி குவஹாத்தி ஆகியவற்றுடன் இணைந்து, இந்த விளக்கக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வு மார்ச் 27, 2025 அன்று காலை 9:00 மணிக்கு பெங்களூரு ஐஐஎஸ்சி தேசிய அறிவியல் கருத்தரங்கு வளாகத்தில் தொடங்க உள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்கத்தின்  செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

***

TS/PLM/LDN/KR/DL


(Release ID: 2114584) Visitor Counter : 21