நிதி அமைச்சகம்
ரொக்கப் பணம் பயன்பாடு இல்லாத இந்தியாவை மேம்படுத்துதல்
Posted On:
24 MAR 2025 2:09PM by PIB Chennai
குறைந்த மதிப்பிலான யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், சிறு வர்த்தகர்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்கும் நடப்பு நிதியாண்டில் 1,500 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 2,000 ரூபாய் வரையிலான சிறிய பரிவர்த்தனைகளுக்கு 0.15% ஊக்கத்தொகை வழங்க வகை செய்கிறது.
UPI 123 PAY, Lite மற்றும் LiteX போன்ற செயலிகள் மூலம் கிராமப்புற மற்றும் இரண்டாவது நிலை நகரங்களில் யூ.பி.ஐ. உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது.
சர்வதேச நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 2024-25-ம் நிதியாண்டிற்கான 'குறைந்த மதிப்பிலான பீம் செயலி மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு (வர்த்தகரிடமிருந்து வர்த்தகர்களுக்கு) ஊக்கத் தொகை வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு உத்வேகம் அளிப்பதுடன், சிறு வர்த்தகர்களை யுபிஐ செயலி மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114335
----
TS/SV/KPG/KR
(Release ID: 2114384)
Visitor Counter : 61