ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜல் ஜீவன் இயக்கத்தின் தற்போதைய நிலை
प्रविष्टि तिथि:
24 MAR 2025 12:13PM by PIB Chennai
ஆகஸ்ட் 2019 முதல், மத்திய அரசானது மாநிலங்களுடன் இணைந்து ஜல் ஜீவன் மிஷன் – ஹர் கர் ஜல் (நீர்வள இயக்கம் – இல்லந்தோறும் குடிநீர்) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் வழிக் குடிநீரானது பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் (பிஐஎஸ்: 10500) ஒரு நாளைக்கு 55 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் தொடக்கத்தில், 3.23 கோடி (16.7%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, 17.03.2025 அன்றைய நிலவரப்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அறிவிப்புகளின்படி ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கூடுதலாக சுமார் 12.30 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, 17.03.2025 நிலவரப்படி, நாட்டில் உள்ள மொத்த 19.36 கோடி கிராமப்புற வீடுகளில், 15.53 கோடிக்கும் அதிகமான (80.20%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளன. மீதமுள்ள 3.83 கோடி வீடுகளுக்கான பணிகள் அந்தந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் செயல்முறைத் திட்டத்தின்படி பல்வேறு கட்டங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன.
இந்த இயக்கத்தின் தொடக்க மதிப்பீடு ரூ.3.60 லட்சம் கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2.08 லட்சம் கோடியாகும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த மத்திய அரசின் பங்கு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிதியமைச்சர் தமது 2025-26 பட்ஜெட் உரையில் நீர்வள இயக்கம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நீர்வளத் துறை இணையமைச்சர் திரு. வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2114280)
TS/IR/RR/KR
(रिलीज़ आईडी: 2114380)
आगंतुक पटल : 43