இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
லக்னோவில் நடந்த ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ நிகழ்ச்சியில் டாக்டர் மனுஷ்க் மாண்டவியா பங்கேற்பு
Posted On:
23 MAR 2025 3:52PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, உத்தரப் பிரதேச அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் கிரிஷ் சந்திர யாதவ் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை வழிநடத்திச் சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உடல் பருமனை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் என்ற செய்தியைப் பரப்பிய டாக்டர் மாண்டவியா, "சைக்கிள் ஓட்டுவது ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், குணத்தையும் உருவாக்குகிறது" என்றார்.
மத்திய விளையாட்டு அமைச்சர், மரைன் டிரைவ் (சமாஜிக் பரிவர்தன் ஸ்தல்) முதல் சம்தா முலாக் சௌராஹா வரை 3 கிலோமீட்டர் பயணத்தை முடித்தார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் சேர்ந்து சௌராஹா வரை பயணம் செய்தார்.
லக்னோவில் உள்ள நேதாஜி சுபாஸ் பிராந்திய மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சைக்கிள் ஓட்டுதல் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மற்றும் உள்ளூர் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களிடமிருந்து பெரும் உற்சாகத்தைக் கண்டது.
சைக்கிள் பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மாண்டவியா, உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும், நாடு முழுவதும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதை தங்கள் அன்றாட நடைமுறைகளில் இணைக்குமாறு குடிமக்களை ஊக்குவித்தார்.
"சைக்கிள் ஓட்டுதல் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பண்புகளை உருவாக்குகிறது, நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இது ஒரு போக்குவரத்து முறை மட்டுமல்ல, ஆரோக்கியமான, நிலையான எதிர்காலத்திற்கான முக்கிய படியாகும். அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டுவதன் மூலம், நம் உடல் நல்வாழ்வை மேம்படுத்தலாம், மாசுபாட்டைக் குறைத்து, பசுமையான சுற்றுச்சூழலுக்கு பங்களிக்க முடியும். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நமது கிரகத்தின் நலனுக்காக நாம் அனைவரும் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிப்போம், ஆரோக்கியமான இளைஞர்கள் வளமான மாநிலம் மற்றும் நாட்டின் பலம், ”என்று அவர் கூறினார்.
இதுவரை, நாடு தழுவிய சைக்கிள் ஓட்டுதல் 5000 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தோராயமாக 2 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்கள் பங்கேற்றனர். இந்த இயக்கம் நாடு முழுவதும் காற்று மாசு அளவைக் குறைக்க சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பலரின் பங்கேற்புடன் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த முயற்சி நடத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114172.
***
PKV/KV
(Release ID: 2114189)
Visitor Counter : 41