தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் அனிமேஷன், மங்கா போட்டி மும்பையில் 2025 மார்ச் 23 அன்று நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
20 MAR 2025 6:38PM
|
Location:
PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமானது இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு சங்கத்துடன் இணைந்து வேவ்ஸ் அனிமேஷன், மங்கா போட்டியின் அடுத்த பதிப்பை மும்பையில் 2025 மார்ச் 23 அன்று நடத்தவுள்ளது. முந்தைய போட்டிகள் குவஹாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர், வாரணாசி, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்று இருந்தன.
மும்பையில் இந்தப் போட்டி விஸ்லிங் வுட்ஸ் இன்டர்நேஷனல் கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மங்கா (ஜப்பான் பாணி காமிக்ஸ்), வெப்டூன் (டிஜிட்டல் காமிக்ஸ்), அனிமேஷன் (ஜப்பான் பாணி அனிமேஷன்) உட்பட பல்வேறு வகைமைகளில் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள்.
இதன் பங்கேற்பாளர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது மட்டுமின்றி குரல் நடிப்பு, ஒப்பனை நடிப்பு போன்ற மெய்சிலர்க்க வைக்கும் போட்டிகளையும் கண்டுகளிப்பார்கள். இதே நாளில் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கி சாதனைகளைகா கொண்டாடுவதுடன், நிகழ்வு நிறைவடையும்.
கூடுதல் விவரங்களுக்கு இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு சங்கத்தின் செயலாளர் ஆங்கூர் பாஸினை 98806 23122 என்ற செல்பேசி எண்ணில் அல்லது secretary@meai.in; www.meai.in/wam என்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2113340
***
TS/SMB/AG/DL
रिलीज़ आईडी:
2113422
| Visitor Counter:
36