குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் நாளை நடைபெறும் உத்யம் விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார்
Posted On:
19 MAR 2025 2:47PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் 2025 மார்ச் 20 முதல் மார்ச் 30 வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் "உத்யம் விழாவிற்கு" ஏற்பாடு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உணர்வைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 மார்ச் 20 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் உத்சவ் விழாவிற்கு வருகை தர உள்ளார்.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்கள்:
• பாரம்பரியம் மற்றும் கைவினைப்பொருட்கள், இயற்கை மற்றும் வேளாண் அடிப்படையிலான தயாரிப்புகள், பசுமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை தொழில்நுட்பம், பெண் தொழில்முனைவோர், பிரதமர் விஸ்வகர்மா மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர், காதி மற்றும் கிராமத் தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை வணிக ஆதரவு அரங்கு என ஏழு பிரிவுகளில் பல்வேறு தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்
• சுமார் 60 அரங்குகளில், கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் விற்பனை மற்றும் காட்சிப்படுத்தும் தயாரிப்புகள்.
• குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை மற்றும் பழங்குடியினத் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு பிரத்யேக அரங்கு, கருவி மற்றும் நேரடி மட்பாண்ட செயல்விளக்கத்துடன் திட்டத்தின் கீழ் வரும் வர்த்தகங்களை காட்சிப்படுத்தும்.
• ஹுனார் சங்கீத், வீதிநாடகம், புடவை அலங்கார அமர்வுகள் மற்றும் ராஜஸ்தானி பொம்மலாட்டம் போன்ற நடவடிக்கைகள் நிகழ்வுக்கு உற்சாகம் சேர்க்கும்.
2025, மார்ச் 20 முதல் 30 வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த விழாவை பொதுமக்கள் பார்வையிடலாம்.
***
(Release ID: 2112718)
TS/IR/RR/KR
(Release ID: 2112856)