தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
5 ஜி புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2025-ஐ அறிமுகப்படுத்துவதாக தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது
Posted On:
17 MAR 2025 9:04AM by PIB Chennai
தொலைத்தொடர்புத் துறை 5ஜி புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2025-ஐ அறிவித்துள்ளது. இது சமூக, தொழில்துறை சவால்களை எதிர்கொள்ள புதுமையான 5ஜி தீர்வுகளை விரைவாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆறு மாத கால முன்முயற்சியாகும். மாணவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் இதில் பங்கேற்கலாம்.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொலைத் தொடர்பு பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள், 5ஜி ஒளிபரப்பு, நவீன சுகாதாரம், விவசாயம், தானியங்கி தொழில்துறை செயல்முறைகள், குவாண்டம் தகவல் தொடர்பு போன்ற முக்கிய அம்சங்களில் 5ஜி பயன்பாடு தொடர்பான திட்டங்களை மேம்படுத்த இந்த ஹேக்கத்தான் வழிவகுக்கும்.
ஹேக்கத்தான் போட்டி பல கட்டங்களாக நடைபெறும். முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது முதல் இறுதி மதிப்பீடு வரை பல கட்டங்களாக இந்த ஹேக்கத்தான் நடைபெறுகிறது.
முன்மொழிவுகள் பட்டியலிடப்பட்டவுடன், முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் தங்கள் யோசனைகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலைப் பெறும். முதல் 25 முதல் 50 அணிகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். இதில் அவர்களுக்கு மூன்று மாத காலப்பகுதியில் (2025 ஜூன் 15 - செப்டம்பர் 15) தங்கள் முன்மாதிரிகளை உருவாக்க ஒவ்வொரு அணிக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இறுதி கட்டம், மதிப்பீடு, காட்சிப்படுத்தல் ஆகியவை 2025 செப்டம்பர் பிற்பகுதியில் நடைபெறும். இதில் மதிப்பீடு நான்கு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் நடைபெறும். தொழில்நுட்ப செயலாக்கம், அளவிடுதலும் சந்தை தயார்நிலையும், சமூக- தொழில்துறை தாக்கம், புதுமை ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்படும். வெற்றியாளர்கள் அக்டோபர் 2025-ல் அறிவிக்கப்படுவார்கள்.
முதலிடம் பிடிக்கும் வெற்றியாளருக்கு ஐந்து லட்ச ரூபாயும், இரண்டாவது இடத்திற்கு மூன்று லட்ச ரூபாயும், மூன்றாவது இடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாயும் பரிசு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு தொலைத்தொடர்பு துறையின் கீழ்கண்ட சமூக வலைதளப் பக்கங்களை பார்க்கவும்:
எக்ஸ் - https://x.com/DoT_India
இன்ஸ்டாகிராம் - https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
முகநூல் - https://www.facebook.com/DoTIndia
யூடியூப்- https://www.youtube.com/@departmentoftelecom
***
(Release ID: 2111691)
TS/PLM/AG/KR
(Release ID: 2111757)
Visitor Counter : 28