WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு போட்டி: வேவ்ஸ் 2025, 2-வது சுற்றுக்கு 78 படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

 Posted On: 13 MAR 2025 5:32PM |   Location: PIB Chennai

இந்தியாவில் படையுங்கள் போட்டியின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு போட்டியை டான்சிங் ஆட்டம்ஸ் அமைப்புடன் இணைந்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடத்தியது. இந்தப் போட்டியில் உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) 2025-ன் 2-வது சுற்றுக்கு 78 படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனிமேஷன், விரிவடைந்த யதார்த்தம் (ஏஆர்), மெய்நிகர் யதார்த்தம் (விஆர்), மெய்நிகர் உற்பத்தி, காட்சிப் படிமங்கள் ஆகிய 5 பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

பொழுதுபோக்கு சந்தைப்படுத்தல் தொழில்முறையாளர் ஜான் நாகெல், அனிமேஷன் வேர்ல்டு நெட்வொர்க் அமைப்பின் நிறுவனர் மற்றும் முதன்மை தொகுப்பாளர் டான் சார்ட்டோஇயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் கியான்மார்க்கோ செர்ரா, எழுத்தாளர் இந்து ராம்சந்தானி, விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் வைபவ் பிவ்லாத்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிக்கு வந்த படைப்புகளை பரிசீலனை  செய்தனர். அசல் தன்மை, கதை சொல்லும் திறன், பொழுதுபோக்கு அம்சம், சந்தைப்படுத்தலுக்கான அம்சம், பார்வையாளர்களை ஈர்த்தல்தொழில்நுட்ப சிறப்பம்சம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தப் போட்டி மாணவர்கள், பயிற்சி முறை கலைஞர்கள், தொழில்முறை கலைஞர்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.  லண்டன், பாலி, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் போட்டிக்கு வந்திருந்தன. தற்போது தேர்வு பெற்றுள்ள படைப்புகளிலிருந்து  இறுதி சுற்றுக்கான தேர்வு 2025 மார்ச் 20 வாக்கில் நிறைவடையும். புதிதாக நியமிக்கப்படும் நடுவர் குழு மூலம் முதன்மையான மூன்று வெற்றியாளர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.  இதற்கான அறிவிப்பு 2025 ஏப்ரல் 10-ம் தேதிக்கு முன் வெளியிடப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தத்தில் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111251

 

***

TS/SMB/AG/DL


Release ID: (Release ID: 2111291)   |   Visitor Counter: 34