புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் சூர்யசக்தி இல்லம் : இந்தியாவில் சூரியசக்தி புரட்சி

Posted On: 13 MAR 2025 11:52AM by PIB Chennai

பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின்சக்தி திட்டம் என்பது வீடுகளின் மேற்கூரைகளில் சூரியமின் உற்பத்திக்கான தடுகளை நிறுவுதற்கான உலகின் மிகப்பெரிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2025 மார்ச் 10-ம் தேதி வரை 10 லட்சம் வீடுகளில் சூரியமின் உற்பத்திக்கான தகடுகள் நிறுவப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டம், நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில், சூரிய மின் உற்பத்திக்கான தகடுகளை அமைப்பதற்கு 47.3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்ட்டடதாகவும், அவற்றுக்கான மானியத் தொகையாக ரூ. 4,770 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டு அதன் மூலம் 6.13 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், சூரியமின் தகடுகளை அமைப்பதற்கு பிணையில்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை 6.75 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் 12 பொதுத்துறை வங்கிகள்  மூலம் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை கடனுதவி பெறுவதற்காக 3.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 1.58 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 1.28 லட்சம் பேருக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 100 மரங்களுக்கு இணையான வகையில், கரியமிலவாயு வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் தூய்மையான, பசுமையான, தற்சார்புமிக்க நாடாக உருவெடுக்க வகை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111106

***

TS/SV/RJ/KR


(Release ID: 2111179) Visitor Counter : 35