கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் மூன்று சர்க்கரை ஆலைகளின் நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி- மத்திய அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுகிறது - திரு அமித் ஷா

Posted On: 08 MAR 2025 6:35PM by PIB Chennai

குஜராத்தில் மூன்று சர்க்கரை ஆலைகளின் புதுப்பித்தல், நவீனமயமாக்கல் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று உரையாற்றினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சர்க்கரை ஆலையின் புத்துயிர் நடவடிக்கை இந்த முழு பிராந்தியத்திலும் வல்சாத்திலும் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு செழிப்புக்கான கதவைத் திறக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது எனவும் இது விவசாயத்தை நம்பியுள்ள  நாட்டில் கோடிக் கணக்கான விவசாயிகளின் வளர்ச்சிக்கான பாதைகளைத் திறந்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.  எத்தனால் உற்பத்தி செய்யும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உணவுப் பாதுகாப்புக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பெட்ரோலிய இறக்குமதி செலவைக் குறைக்கவும் உதவுகின்றன என்று அவர் கூறினார். கூடுதலாக, நமது விவசாயிகள் உள்ளூர் உற்பத்தியாளர்கள் என்ற நிலையிலிருந்து உலகளாவிய உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்கள் என்ற நிலைக்கு மாறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். வரும் நாட்களில், எத்தனால் உற்பத்தியை அதிகரித்து, அதை ஏற்றுமதி செய்ய உலக சந்தையில் நுழைவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

குறைந்த விலை விலையில் உரங்கள், சொட்டு நீர் பாசன வசதிகள், இயற்கை விவசாயம், விவசாயிகள் கடன் அட்டைகள், எத்தனால் போன்ற பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் விவசாயிகள் தொடர்ந்து பயனடைவதை உறுதி செய்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிந்தனையின் விளைவாக பல்வேறு பலன்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றி வருவதாக அவர் தெரிவித்தார். சொட்டு நீர் பாசனத்தை பின்பற்ற விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம், தண்ணீரை சேமிக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

 

*****

PLM /DL


(Release ID: 2109507) Visitor Counter : 22