இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தனித்துவமான சைக்கிள் பேரணி- ஹைதராபாத் அருகே மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
Posted On:
08 MAR 2025 1:02PM by PIB Chennai
தெலங்கானாவின் ஹைதராபாத் அருகே, கன்ஹா சாந்தி வனத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு சைக்கிள் பேரணியில் மாநில விளையாட்டு அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவுடன் இணைந்து பங்கேற்றனர்.
பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு மாண்டவியா, "இந்த சைக்கிள் பேரணி நமது மகளிர் சக்திக்கு ஒரு சான்றாகும். இது விளையாட்டுக்கும் அதற்கு அப்பாலும் பெண்களின் உறுதிப்பாடு, தலைமை, சிறப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது." என்றார்.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை, 2036 கோடைகால ஒலிம்பிக்கை நடத்துவதற்கான முயற்சி குறித்து விவாதிக்க நடைபெறும் சிந்தனை முகாமின் ஒரு பகுதியாக நடைபெற்ற சைக்கிள் பேரணி, ஆரோக்கிய, ஆன்மீக மையமான கன்ஹா சாந்தி வனத்தின் உறுப்பினர்களிடமிருந்து மிகுந்த ஆர்வத்தைப் பெற்றது.
அஸ்மிதா செய்திமடல் இதில் வெளியிடப்பட்டது. 2021-ம் ஆண்டில் அரசால் தொடங்கப்பட்ட 'ஸ்போர்ட்ஸ் ஃபார் வுமன்' பணியின் சாராம்சத்தை இந்த செய்திமடல் தெரிவிக்கிறது.
அஸ்மிதா என்பது பெண்களை ஊக்குவிப்பதன் மூலம் விளையாட்டில் மைல்கல்லை அடைதல் என்பதாகும். இது பல்வேறு போட்டிகள் மூலம் பெண்களிடையே விளையாட்டை மேம்படுத்துவதற்கான கேலோ இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
*****
PLM /DL
(Release ID: 2109414)
Visitor Counter : 20