WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

டிஜிட்டல் உள்ளடக்கங்களை போலியாக பிரதியெடுப்பதற்கு எதிரான வேவ்ஸ் சவால் - அதிநவீன தீர்வுகளுடன் உள்ளடக்கப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்

 प्रविष्टि तिथि: 08 MAR 2025 12:35PM |   Location: PIB Chennai

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய அம்சமாக வேவ்ஸ் உள்ளடக்கத் திருட்டு எதிர்ப்பு சவால் (Anti Piracy Challenge) நடத்தப்படுகிறது. டிஜிட்டல் மீடியாக்கள் வளரும்போது, உள்ளடக்கத் திருட்டு, அங்கீகரிக்கப்படாத விநியோகம் ஆகியவை தொடர்பான சவால்களும் அதிகரிக்கின்றன.

மோசடிகளைத் தடுக்கும் விதமாக இந்த சவால் தொழில்நுட்பங்களில் புதுமையான தீர்வுகளை உருவாக்க இந்த சவால் முற்படுகிறது. தனிநபர்கள், ஆராய்ச்சிக் குழுக்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கேற்பை இது ஊக்குவிக்கிறது.

இதில் பங்கேற்கதற்கான பதிவுக்கான கால அவகாசம் 2025 பிப்ரவரி 28 அன்று நிறைவடைந்தது.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்துள்ள இந்த போட்டியில் பங்கேற்க 1,296 பதிவுகள் வந்துள்ளன.  இது டிஜிட்டல் உள்ளடக்க பாதுகாப்பில் வலுவான ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது.

டிஜிட்டல் உள்ளடக்க பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக வேவ்ஸ் உள்ளடக்கத் திருட்டு எதிர்ப்பு சவால் உள்ளது.  ஊடகம், பொழுதுபோக்கு உள்ளடக்கப் பாதுகாப்பில் அதிநவீன முன்னேற்றங்களுக்கான மையமாக இந்தியாவின் நிலையை இந்த சவால் வலுப்படுத்துகிறது. வேவ்ஸ் எனப்படும் ஒலி, ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடு தில்லியில் 2025 மே 1 முதல் 4 வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சவால் நடத்தப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109343

https://wavesindia.org/challenges-2025

https://antipiracychallenge.my.canva.site/

***

PLM/DL


रिलीज़ आईडी: 2109400   |   Visitor Counter: 55

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam