பிரதமர் அலுவலகம்
ஜப்பான்-இந்தியா வர்த்தக ஒத்துழைப்புக் குழு பிரதிநிதிகள் பிரதமர் திரு. மோடியைச் சந்தித்தனர்
Posted On:
05 MAR 2025 7:52PM by PIB Chennai
ஜப்பான்-இந்தியா வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் (ஜேஐபிசிசி) தலைவர் திரு. டாட்சுவோ யசுனாகா தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். உற்பத்தி, வங்கி, விமான சேவை, மருந்துத் துறை, தொழிற்சாலை பொறியியல் மற்றும் தளவாடங்கள் போன்ற முக்கிய துறைகளில் உள்ள முன்னணி ஜப்பானிய பெரு வர்த்தக நிறுவனங்களின் மூத்த தலைவர்கள் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
புதுதில்லியில் இன்று (2025 மார்ச் 6) நடைபெறவுள்ள ஜப்பான் – இந்தியா வர்த்தக ஒத்துழைப்புக் குழுவுடன் இந்திய வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் 48-வது கூட்டுக் கூட்டம் குறித்து திரு. யசுனாகா பிரதமரிடம் விளக்கினார். இந்தியாவில் குறைந்த செலவில் உயர்தரமான பொருட்களை உற்பத்தி செய்தல், ஆப்பிரிக்கா மீது சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் உலக சந்தைகளுக்கான உற்பத்தியை விரிவுபடுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பரிமாற்றங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இந்த விவாதங்கள் நடைபெற்றன.
இந்தியாவில் ஜப்பானிய வர்த்தகர்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கும், "இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்கு உற்பத்தி செய்வோம்" என்ற திட்டத்திற்கான உறுதியான நிலைப்பாட்டிற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாக விளங்கும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2108603)
TS/PKV/RR/KR
(Release ID: 2108726)
Visitor Counter : 11
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam