பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மார்ச் 5-ம் தேதி வேலைவாய்ப்பு குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்கிறார்

முக்கிய கருப்பொருள்கள்: மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமைகளில் முதலீடு

Posted On: 04 MAR 2025 5:09PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மார்ச் 5-ம் தேதி பிற்பகல் 1:30 மணியளவில் காணொலி காட்சி மூலம் பட்ஜெட்டுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையக் கருத்தரங்கில் பங்கேற்பார். இந்த இணையக் கருத்தரங்கின் முக்கிய கருப்பொருள்கள் மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமைகளில் முதலீடு செய்தல் ஆகியவை ஆகும். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றுவார்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது அரசின் முக்கிய கவனம் செலுத்தும் துறைகளில் ஒன்றாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, வேலைவாய்ப்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அதிக வேலைவாய்ப்பு வழிகளை உருவாக்குவதற்கும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த இணையக் கருத்தரங்கு அரசு, தொழில், கல்வித்துறை மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை வளர்க்கும். இது மாற்றத்தக்க பட்ஜெட் அறிவிப்புகளை பயனுள்ள விளைவுகளாக மாற்றும் வகையில் விவாதங்களை ஊக்குவிக்கும். மக்களை மேம்படுத்துதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதுமைகளை வளர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தி, விவாதங்கள் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்; 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கை அடைவதை நோக்கி, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் தலைமைத்துவம், உழைக்கும் திறமையான, ஆரோக்கியமான பணியாளர்களை உருவாக்குவதை இது நோக்கமாக கொண்டிருக்கும்.

***

PKV/AG/DL


(Release ID: 2108208)