குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய வருவாய்ப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்
Posted On:
04 MAR 2025 12:35PM by PIB Chennai
இந்திய வருவாய்ப் பணியின் (78-வது தொகுதி) பயிற்சி அதிகாரிகள் இன்று (மார்ச் 4, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.
அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளின் சேவையானது ஆளுகை மற்றும் நலத்திட்டங்களுக்கான மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளது என்று கூறினார். செயலூக்கமான பொருளாதாரத்தில் வரிகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளாக அவர்கள் இந்த அத்தியாவசியமான நிதி ஆதாரத்தை நியாயமான, திறன்மிக்க மற்றும் வெளிப்படையான முறையில் வசூலிக்கப்படுவதைஉறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
நமது உள்கட்டமைப்பு வளர்ந்து வருகிறது, டிஜிட்டல் இணைப்பு இடைவெளிகளைக் குறைக்கிறது, மேலும் பொருளாதார வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக அணுகக்கூடியவை என்று குடியரசுத் தலைவர் கூறினார். வளர்ச்சி நிலையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க, வளங்கள் திறமையாகவும், நியாயமாகவும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் அமைப்பை நம்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அனைவரும் தங்கள் சட்டப்பூர்வ திறனுக்கு ஏற்ப பங்களிப்பதை உறுதி செய்யும் செயல்முறையை மேற்பார்வையிடுவதால், அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று அவர் கூறினார், அதே நேரத்தில் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் மக்கள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாறிவரும் காலங்கள், வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் மற்றும் அரசின் முன்முயற்சிகள் அதிக செயல்திறன் ஆகியன வெளிப்படைத்தன்மை மற்றும் வசதிக்கான புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்த மாற்றத்தின் மையத்தில் உள்ளது. வருமான வரித் துறை மேம்பட்ட தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி முரண்பாடுகளைக் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கண்டறிந்து நேர்மையான வரி செலுத்துவோர் சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி மட்டுமே, அது மனித மதிப்புகளுக்கு மாற்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தரவு சார்ந்த அமைப்புகள் செயல்திறனை அதிகரிக்கக்கூடும், ஆனால் அவை ஒருபோதும் கருணை மற்றும் நேர்மையை மாற்ற முடியாது என்று அவர் கூறினார். அவர்களின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைவரின், குறிப்பாக பின்தங்கிய மற்றும் பலவீனமான பிரிவுகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
இந்திய வருவாய்ப் பணியின் பயிற்சி அதிகாரிகள் (78-வது தொகுதி), ராயல் பூட்டானைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட, நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரிகள் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
***
(Release ID: 2107992)
TS/PKV/AG/RR
(Release ID: 2108042)
Visitor Counter : 20