வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ஆசியா & பசிபிக் பகுதியில் 12வது மண்டல 3ஆர் (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி) மற்றும் சுழற்சிப் பொருளாதார மன்றக் கூட்டம் ஜெய்ப்பூரில் தொடங்கியது
Posted On:
03 MAR 2025 2:12PM by PIB Chennai
ஆசியா & பசிபிக் பகுதியில் 12வது மண்டல 3ஆர் (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி) மற்றும் சுழற்சி பொருளாதார மன்றக் கூட்டம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு மனோகர் லால், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். சாலமன் தீவுகளின் அமைச்சர் திரு. ட்ரெவர் ஹெட்லி மனேமஹாகா, துவாலு அமைச்சர் திரு. மைனா வகாஃபுவா தாலியா, மாலத்தீவுகளின் பருவநிலை மாற்ற துணை அமைச்சர் திரு. அகமது நிஜாம் ஆகியோர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. அசாவோ கெய்ச்சிரோ மெய்நிகர் மூலம் இந்த அமர்வில் இணைந்தார்.
உத்தராகண்ட் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு. பிரேம் சந்த் அகர்வால், ஹரியானா நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அமைச்சர் திரு. விபுல் கோயல், ராஜஸ்தான் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டுவசதி அமைச்சர் திரு. ஜப்பர் சிங் கர்ரா, மத்தியப் பிரதேச நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டுவசதி அமைச்சர் திரு. கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, மன்றத்தின் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு எழுத்துப்பூர்வ செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அதில் இந்தியா பி-3 (மக்களுக்கு உகந்த புவிக்கோள்) அணுகுமுறையை வலுவாக ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தியா எப்போதும் தனது சுழற்சிப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் அனுபவங்களையும், கற்றல்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான நகர்ப்புற மேம்பாடு மற்றும் வள செயல்திறனை உறுதி செய்வதில் 3ஆர் மற்றும் சுழற்சிப் பொருளாதாரக் கொள்கைகளின் பங்கை அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் திரு. மனோகர் லால், இந்தூரில் நடைபெற்ற இந்த மன்றத்தின் 8வது வெற்றிகரமான நிகழ்வுக்குப் பிறகு இந்தியா இந்த மன்றத்தின் 12வது கூட்டத்தை நடத்துவதில் பெருமையடைவதாகக் கூறினார். மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் போன்ற நீடித்து நிலைக்கும் தன்மையில் ஆழமாக வேரூன்றிய மரபுகள் காரணமாக ஜெய்ப்பூர் இந்நிகழ்ச்சி நடத்துவதற்கு சிறந்த இடமாக உள்ளது என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2107712)
TS/IR/RR
(Release ID: 2107751)
Visitor Counter : 19