உள்துறை அமைச்சகம்
மத்திய பிரதேசத்தின் சித்ரகூட்டில் பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்கின் 15 வது நினைவு தின விழாவில் மத்திய உஅமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
Posted On:
27 FEB 2025 7:45PM by PIB Chennai
மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் இன்று நடைபெற்ற பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்கின் 15-வது நினைவு தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், துணை முதலமைச்சர் திரு. ராஜேந்திர சுக்லா உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, நானாஜி தேஷ்முக்கின் நினைவு தினத்தை முன்னிட்டு, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலை திறப்பு மற்றும் ராமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "ராம் தரிசனம்" ஆகியவற்றுடன் கூடிய ஒரு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறினார். பல நூற்றாண்டுகளாக வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தனிநபர்களில் நானாஜி தேஷ்முக்கும் ஒருவர் என்று அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் பிறந்த நானாஜி, குழந்தைப் பருவத்திலிருந்தே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பு கொண்டிருந்தார் என்று திரு ஷா கூறினார். அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் பிரச்சாரகராக செயல்பட்டதுடன், உத்தரப்பிரதேசத்தை தனது பணிப் பகுதியாக மாற்றியதாகவும், பாரதிய ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றி, பண்டிட் தீனதயாளுடன் சேர்ந்து, ஜன சங்கத்தின் அடித்தளத்தை அமைப்பதற்காக உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் பிராந்தியத்திற்கும் பயணம் செய்தார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசியல் நோக்கங்களுக்காக ஒருவர் அடிக்கடி எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், அரசியலில் இருக்கும்போது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவது மிகவும் கடினம் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். எனினும், நானாஜியின் நீண்ட வாழ்நாளில் நானாஜியை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. அவரை எதிர்ப்பது பொருத்தமானது என்று எவரும் கருதவில்லை. கலை, இலக்கியம், தொழில், சேவை, அரசியல் என அனைத்துத் துறைகளிலும் நானாஜி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொரு துறையிலும் அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றார் என்று அவர் கூறினார். ஒருவர் தமது வாழ்நாளில் இவ்வளவு சாதிப்பது மிகவும் கடினம். கிராமப்புற வளர்ச்சியின் மூலம், நானாஜி தேஷ்முக், பண்டிட் தீனதயாளின் 'அந்தியோதயா' கொள்கையை களத்தில் அமல்படுத்தினார் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106726
-----
RB/DL
(Release ID: 2106765)
Visitor Counter : 15