அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய புவிசார் கொள்கை 2022
प्रविष्टि तिथि:
27 FEB 2025 1:22PM by PIB Chennai
இந்திய புவிசார் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகள் உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் அளிப்பதுடன் நவீன புவிசார் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்கவும் உதவும். இதன் மூலம் உலக அளவில் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்திய நிறுவனங்கள் போட்டியிட முடியும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
2022 டிசம்பர் 28-ம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய புவிசார் கொள்கையானது இந்தியாவை புவிசார் துறையில் உலகின் முன்னோடி நாடாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கொள்கையாகும். 2035-ம் ஆண்டு வரை இக் கொள்கை நீட்டிக்கப்படுவதுடன் புவிசார் தரவுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தவும் அதன் நிர்வாகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கும்.
மக்களை மையமாகக் கொண்ட பொது நிதியத்துடன் உருவாக்கப்பட்ட புவிசார் தரவுத்தொகுப்புகள் வெளிப்படையான வகையில் அனைவரும் அணுகக்கூடிய விதத்தில் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. இது தேசிய மற்றும் மாநில அளவிலான புவிசார் உள்கட்டமைப்பு சேவைகள் மற்றும் தளங்களின் வளர்ச்சிக்கான ஒரு வியூகத்தை எடுத்துக் காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2106569
-----
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2106611)
आगंतुक पटल : 69