புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தரவு சார்ந்த நுண்ணறிவுகளுடன் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நிரலோட்டம்
Posted On:
25 FEB 2025 9:42AM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது மைகவ் இணைய தளத்துடன் இணைந்து, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தரவு சார்ந்த நுண்ணறிவு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட புதுமை கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் ஒரு அற்புதமான தரவு காட்சிப்படுத்தல் ஹேக்கத்தானை (நிரலோட்டம்) தொடங்க உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் உருவாக்கிய பரந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை புதுமையான தரவு சார்ந்த நுண்ணறிவுகளை உருவாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு இந்தியாவின் இளம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதை இந்த ஹேக்கத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழிலாளர் சக்தி காலமுறை கணக்கெடுப்பு, வீட்டு நுகர்வோர் செலவின ஆய்வு, தொழில்துறைகளின் வருடாந்திர ஆய்வு, நுகர்வோர் விலைக் குறியீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் அறிக்கைகள், மைக்ரோடேட்டா மற்றும் பிற தரவுத்தொகுப்புகளிலிருந்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய பங்கேற்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த ஹேக்கத்தான் நிகழ்வு மைகவ் தளத்தில் 2025 பிப்ரவரி 25 முதல் 2025 மார்ச் 31 வரை நடைபெறும். இளங்கலை, முதுகலை அல்லது ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் பங்கேற்கலாம். தொழில்நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 30 பங்கேற்பாளர்களுக்கு ஒரு முதல் பரிசாக ரூ.2 லட்சம், அதைத் தொடர்ந்து இரண்டு இரண்டாம் பரிசாக தலா ரூ.1 லட்சம், இரண்டு மூன்றாம் பரிசாக தலா ரூ.50,000 மற்றும் ஆறுதல் பரிசுகளாக இருபத்தைந்து பேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105978
***
TS/IR/AG/KR
(Release ID: 2106107)
Visitor Counter : 16