உள்துறை அமைச்சகம்
மகாராஷ்டிராவின் புனேவில் நாளை (பிப்ரவரி 22) நடைபெறும் மேற்கு மண்டல கவுன்சிலின் 27வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குகிறார்
Posted On:
21 FEB 2025 1:16PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் புனேவில் பிப்ரவரி 22 அன்று நடைபெறும் மேற்கு மண்டல கவுன்சிலின் 27வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை தாங்குகிறார். மேற்கு மண்டல கவுன்சிலானது குஜராத், கோவா, மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கூட்டத்தை மகாராஷ்டிர அரசு நடத்துகிறது.
மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்தில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை செயலாளர், செயலாளர், மாநிலங்களுக்கிடையிலான மன்றம் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105216
***
TS/SMB/KV/KR
(Release ID: 2105296)
Visitor Counter : 9