தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவு அவதார் உருவாக்க சவால் போட்டி
Posted On:
20 FEB 2025 4:17PM
|
Location:
PIB Chennai
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மின்னணுவியல் துறையில் மெய்நிகர் காட்சிகள் உட்பட பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான கருவிகளை உருவாக்கும் வகையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் அவ்தர் மெட்டா லேப் இணைந்து ஏற்பாடு செய்துள்ள செயற்கை நுண்ணறிவு அவர்தான் உருவாக்க சவால் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 102 சர்வதேச போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 1,251 பேர் இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய கடைசி நாள்:28.2.2025.
வேவ்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இத்தகைய போட்டிகள் அனிமேஷன், மெய்நிகர் காட்சிகள், மின்னணு விளையாட்டுகள், படக்கதை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நவீன தொழில்நுட்பத்தை எடுத்துக் காட்டும் வகையில் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகள் மே 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மும்பையில் உள்ள ஜி யோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தொழில் துறையில் புதிய உச்சத்தை எட்டும் வகையில், இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104987
----
TS/SV/KPG/DL
Release ID:
(Release ID: 2105081)
| Visitor Counter:
62