தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நகரத் தேடல் : பாரதத்தின் வண்ணச் சாயல்கள்
Posted On:
20 FEB 2025 3:23PM by PIB Chennai
வேவ்ஸ் நகரத் தேடல்: பாரதத்தின் வண்ணச் சாயங்கள் என்பது புதுமையான கல்வி விளையாட்டாகும். இது நகைச்சுவை மற்றும் ஈடுபாட்டு அனுபவத்தின் மூலம் இந்தியாவின் நகர்ப்புற மேம்பாட்டை வாழ்க்கையில் இணைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் நகர்ப்புற திட்டமிடலுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்திசைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விளையாடுவோருக்கு இது கற்றுத்தருகிறது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் மின்னணு விளையாட்டு கூட்டமைப்பால் அட்டைகள் அடிப்படையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தூய்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு போன்ற முக்கியமான வளர்ச்சிக் குறியீடுகள் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள 56 நகரங்களை ஒப்பீடு செய்யும் வகையில் இந்த விளையாட்டு அமைந்துள்ளது. இந்த விளையாட்டிற்கு 2025 பிப்ரவரி 15 நிலவரப்படி 1920 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நகரத் தேடல் விளையாட்டில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். 2024 அக்டோபர் 25-ல் தொடங்கியுள்ள இந்தப் போட்டி, 2025 ஏப்ரல் 25 வரை நடைபெறும். வெற்றியாளர்கள் வரும் மே மாதம் நடைபெறவுள்ள வேவ்ஸ் எனும் உலக ஒலி, ஒளி மட்டும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் பாராட்டப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104964
***
TS/SMB/RJ/KR
(Release ID: 2105041)
Visitor Counter : 17