தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள்
प्रविष्टि तिथि:
19 FEB 2025 3:38PM
|
Location:
PIB Chennai
கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள் என்ற கையடக்க சாதன வடிவமைப்பு சவால் என்பது குழந்தைகளின் கற்றல் அனுபவங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறந்த போட்டியாகும். இது இந்தியாவில் படைப்பாற்றல் சவால் போட்டியின் முதலாவது பகுதியாகும். மேலும் இது வேவ்ஸ் (உலக ஒலி, காட்சி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு) கீழ் நடத்தப்படுகிறது. ஒளிபரப்பு & தகவல் ஏவிஜிசி-எக்ஸ்ஆர், மின்னணு ஊடகம், கண்டுபிடிப்பு, திரைப்படங்கள் ஆகிய நான்கு பகுதிகளில் இப்போட்டியில் கவனம் செலுத்தப்படும்.
இந்த நிகழ்வை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தி இந்தியன் டிஜிட்டல் கேமிங் சொசைட்டி உடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது. இப்போட்டியில் பங்கேற்க 3 சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட மொத்தம் 334 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சவாலில் , கல்வியாளர்கள், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்கலாம். இதன் மூலம் கல்வி கையடக்க சாதனத்தின் முன்மாதிரியை உருவாக்க முடியும்:
பொழுதுபோக்குடன் கூடிய கல்வியை அளிக்கும் வகையில் ஒரு புதுமையான கையடக்க சாதனத்தை வடிவமைப்பதை போட்டி வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104683
--
TS/KI/PKG/KR/DL
रिलीज़ आईडी:
2104796
| Visitor Counter:
88