தேசிய மனித உரிமைகள் ஆணையம்
‘டிஜிட்டல் யுகத்தில் அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல்: கார்ப்பரேட் டிஜிட்டல் பொறுப்புத்தன்மை மீதான கவனம்’ என்பது குறித்த விவாதத்திற்கு தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
19 FEB 2025 12:25PM by PIB Chennai
‘டிஜிட்டல் யுகத்தில் அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல்: கார்ப்பரேட் டிஜிட்டல் பொறுப்புத்தன்மை மீதான கவனம்’ என்பது குறித்த விவாதத்திற்கு தேசிய மனித உரிமை ஆணையம் அதன் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு வி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி, தலைமைச் செயலாளர் திரு பரத் லால், மூத்த அதிகாரிகள், இணைய தள நிபுணர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய நீதிபதி திரு வி ராமசுப்பிரமணியன், டிஜிட்டல் உலகத்தில் மனித உரிமையாக அந்தரங்க உரிமையைப் பாதுகாப்பு அவசியமானது என்பதை வலியுறுத்தினார். தொழில்நுட்ப முன்னேற்றமானது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தனிநபர் அந்தரங்க உரிமை பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒத்திசைந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கான பொறுப்பு தனிநபர் பயன்பாட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, தனிநபர் உரிமை ஆகியவற்றின் சமநிலையை பராமரிக்க வலுவான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு டிஜிட்டல் உரிமைகள் மற்றும் கார்ப்பரேட் பொறுப்புத் தன்மை குறித்து அனைவரையும் உள்ளடக்கிய விவாதத்தை நடத்துவதில் ஆணையத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி பேசுகையில், டிஜிட்டல் கல்வியறிவு குறைவாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்றும், இதன்காரணமாக, பலரும் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்றும், இதனால் அவர்கள் ஏமாற்றப்படுவதாகவும் கூறினார். நாட்டில் உள்ள சாமானிய மக்கள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த விவாத நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு முதன்மைத் தலைமை மேலாளர் பொறுப்பு வகிக்கும் திரு சைலேந்திர திரிவேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் குழு ஒருங்கிணைப்பாளர் (சைபர் சட்டம்) திரு தீபக் கோயல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104596
***
TS/SMB/KV/KR
(Release ID: 2104652)