மக்களவை செயலகம்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார்
Posted On:
18 FEB 2025 6:32PM by PIB Chennai
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக், தமது மனைவி திருமதி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் கிருஷ்ணா, அனுஷ்காவுடன் இன்று நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டார். அவர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர் திருமதி சுதா மூர்த்தியும் வருகை தந்திருந்தார்.
மக்களவை செயலாளர் திரு உத்பல் குமார் சிங், திரு சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றார். மாநிலங்களவை செயலாளர் திரு. பி.சி. மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த வருகையின் போது, சுனக் குடும்பத்தினர் நாடாளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டு, அதன் கட்டடக்கலை நுட்பத்தைக் கண்டு வியந்தனர். அரங்கங்கள், அறைகள், அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற மைய மண்டபம் ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த வருகை திரு சுனக்கின் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாகும். சில நாட்களுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 15 அன்று தமது குடும்பத்தினருடன் அவர் தாஜ்மஹாலைப் பார்வையிட்டு இருந்தார்.
*******
TS/IR/KPG/KV
(Release ID: 2104476)
Visitor Counter : 24