தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரோட் டூ கேம் ஜாம்- இந்தியாவின் கேம் டெவலப்பர்களுக்கு அதிகாரம் அளிக்கும் போட்டி

Posted On: 18 FEB 2025 5:48PM by PIB Chennai

 

ரோட் டூ கேம் ஜாம் ("Road to Game Jam") என்பது இந்தியாவின் கேம் டெவலப்பர்கள் தங்கள் படைப்பாற்றலையும் புதுமைகளையும் வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பாகும். கேஜென் (Kratos Gamer Network) உடன் இணைந்து இந்திய கேம் டெவலப்பர் சங்கத்தால் (GDAI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முயற்சிஇந்தியாவில் உருவாக்குங்கள் சவாலின் ஒரு பகுதியாகும்.

இது ஏவிஜிசி-எக்ஸ்ஆர் (AVGC-XR) -அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி/மெய்நிகர் ரியாலிட்டி, மெட்டாவர்ஸ்) ஆகியவற்றில் கவனம் செலுத்தும். வேவ்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த போட்டி அமைகிறது.

இந்த நிகழ்விற்கான பதிவு 2025 பிப்ரவரி 16 வரை நடைபெற்றது. 5,569 கேம் டெவலப்மென்ட் ஆர்வலர்கள் இந்தப் போட்டிக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சவாலின் முடிவுகள் 2025 மார்ச் 16 அன்று அறிவிக்கப்படும். இது வளர்ந்து வரும் கேம் மேம்பாட்டுத் துறையில் படைப்பாற்றலையும், புதுமைகளையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய அளவிலான போட்டியாகும்.

இது கேம் டெவலப்பர்களுக்கு, வழிகாட்டுதல், தொழில்துறை இணைப்புகள்  ஆகியவற்றை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தள இணைப்புகளைப் பார்க்கவும்:

http://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2050194

https://indiagdc.com/waves-game-jam/

https://wavesindia.org/challenges-2025

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2096169

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104400  

***

TS/PLM/AG/KV

 


(Release ID: 2104454) Visitor Counter : 30