தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வேவ்ஸ் முன்னோட்ட காட்சிகள் தயாரிப்புப் போட்டி
Posted On:
18 FEB 2025 3:36PM by PIB Chennai
வேவ்ஸ் எனப்படும் உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக முன்னோட்ட காட்சிகள் (டிரெய்லர்) தயாரிப்புப் போட்டி நடத்தப்படுகிறது. இது நெட்ஃபிளிக்ஸின் விரிவான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி கவர்ச்சிகரமான டிரெய்லர்களை வடிவமைக்க ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.
அதாவது பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்புத் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது. தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை இணைந்து இந்த டிரெய்லர் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்தப் போட்டி அடுத்த தலைமுறை உள்ளடக்க படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
மும்பையில் 2025 மே 1 முதல் 4 வரை நடைபெறும் வேவ்ஸ் உச்சிமாநாடு, ஊடக, பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்.
டிரெய்லர் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிகள்:
வீடியோ எடிட்டிங், திரைப்படத் தயாரிப்பு அல்லது உள்ளடக்க உருவாக்கத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள், ஆர்வமுள்ள திரைப்படக் கலைஞர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் பங்கேற்க குறைந்தபட்சம் 18 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
படைப்பாற்றல், கதைசொல்லல், தொழில்நுட்ப செயல்பாடு, ஒட்டுமொத்த தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் வல்லுநர்கள் குழு டிரெய்லர்களை மதிப்பீடு செய்யும்.
பதிவு விவரங்கள்:
பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. 2025 மார்ச் 31 வரை பதிவுகளை பதிவுகளை சமர்ப்பிக்கலாம். 2025 பிப்ரவரி 15, நிலவரப்படி, உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 3,313 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தப் போட்டி பல்வேறு வகையான பங்கேற்பாளர்களை ஈர்த்துள்ளது.
பதிவுக்கான இணையதள முகவரி: https://reskillll.com/hack/wavesficci/signup
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:
https://wavesindia.org/challenges-2025
https://waves.ficci.in/#faqs
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099217
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2104347
***
(Release ID: 2104347)
TS/PLM/AG/KR
(Release ID: 2104364)
Visitor Counter : 30