தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளா 2025 : 24 மணி நேரமும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சிஆர்பிஎஃப் வீரர்கள்

Posted On: 17 FEB 2025 4:49PM by PIB Chennai

மகா கும்பமேளா 2025-ல் பக்தர்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கான சேவையையும் உறுதி செய்ய மத்திய ரிசர்வ் காவல்படை முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளது. இந்த மகத்தான ஆன்மீகம் சார்ந்த விழாவில் தங்களின் தேசபக்திக்கு சிறந்த உதாரணத்தை காவல்படை ஏற்படுத்தியுள்ளது.

கங்கை படித்துறைகள், கும்பமேளா திடல்கள், முக்கியமான வழித்தடங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பம், தீவிர கண்காணிப்பு ஆகியவற்றுடன் எந்தவித அவசர சூழ்நிலையையும் சமாளிக்க அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மிகப்பெரும் கூட்டத்திற்கிடையே, பக்தர்களுக்கு வழிகாட்டுதலையும், உதவிகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்களின் கனிவான செயல்பாடு, பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. காணாமல் போன குழந்தைகளையும், முதியோர்களையும் அவர்களின் குடும்பத்துடன் மீண்டும் சேர்ப்பிக்கும் முக்கியப் பணியையும் சிஆர்பிஎஃப் வீரர்கள் செய்து வருகின்றனர். எந்த நெருக்கடியையும் உடனடியாக விரைந்து சமாளிக்க சிஆர்பிஎஃப் –ன் பேரிடர் மேலாண்மைக்குழு தயார் நிலையில் உள்ளது.

சிஆர்பிஎஃப்-ன் ஒவ்வொரு வீரரும் தேசம் முதலில் என்ற உணர்வுடன் மகா கும்பமேளாவில் தங்களின் கடமையைச் செய்கிறார்கள். அவர்களின் இந்த தன்னலமற்ற அர்ப்பணிப்புமிக்க சேவை பாதுகாப்பு உணர்வை நிலைநிறுத்துவது மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

***

(Release ID: 2104096)

TS/SMB/RJ/KR


(Release ID: 2104133) Visitor Counter : 35