மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025 இன் 6-வது அத்தியாயத்தில் விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் பூமி பெட்னேகர் மாணவர்களுடன் உரையாடினார்கள்

Posted On: 16 FEB 2025 8:43PM by PIB Chennai

தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025 இன் 6-வது அத்தியாயம் 16.02.2025 அன்று  ஒலிபரப்பப்பட்டது, இதில் நடிகர்கள் விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் பூமி பெட்னேகர் மாணவர்களுடன் படைப்பாற்றலை வளர்ப்பது மற்றும் வாழ்க்கையில் நேர்மறைத் தன்மையைத் தழுவுவது பற்றி உரையாடினார்கள்.
 

விக்ராந்த், காட்சிப்படுத்தலின் ஆற்றலை வலியுறுத்தினார் மற்றும் மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை எழுத்து வடிவில் பதிவிட ஊக்குவித்தார். ஊடாடும் கலந்துரையாடலின்போது, மாணவர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பெற்றோரிடம் வெளிப்படையாக வெளிப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நண்பர்களின் அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவதற்கும் அவரது வழிகாட்டுதலை நாடினார்.

பள்ளிகளில் திறன் மேம்பாட்டை ஊக்குவித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட விக்ராந்த், உயர் இலக்கை அடையும் அதே வேளையில் மாணவர்கள் பணிவுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார். தேர்வுகளுக்கு முன் நல்வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உணர்ச்சி மேலாண்மை குறித்த ஒரு செயல்பாட்டை அவர் நடத்தினார். “நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக ஓய்வெடுங்கள்; மேம்படுத்திக் கொண்டே இருங்கள்; முன்னேறுங்கள், விளையாடுங்கள்", என்ற முக்கிய செய்தியை மாணவர்களுக்கு அவர் அளித்தார்.


நிகழ்ச்சியின் இரண்டாவது விருந்தினரான நடிகை பூமி பெட்னேகர், தனது குழந்தைப் பருவ அனுபவங்களுடன், தனிப்பட்ட சோகத்தை அவர் எவ்வாறு சமாளித்தார், மற்றும் அவர் ஏன் தனது தொழிலை ரசிக்கிறார் என்பதைப்  பகிர்ந்து கொண்டார்.மாணவர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். ஒரு மாஸ்டர் கிளாஸில், மாணவர்கள் எந்த உரையையும் எளிதாக மனப்பாடம் செய்வது எப்படி என்று அவர் கற்பித்தார். 


மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2103872&reg=3&lang=1 

(Release ID: 2103872)


(Release ID: 2103989) Visitor Counter : 17