தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பெர்லினாலே 2025 இல் வேவ்ஸ் தொடர்பு நிகழ்ச்சி
Posted On:
15 FEB 2025 8:01PM by PIB Chennai
வேவ்ஸ் 2025 க்கான தொடர்பு நிகழ்ச்சி இன்று பெர்லினாலே திரைப்பட விழா 2025 இல் நடைபெற்றது, அதில் இந்திய தூதுக்குழு, ஐரோப்பிய திரைப்பட சந்தையில் பங்கேற்கும் உலகெங்கிலும் உள்ள முக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடியது. இந்த அமர்வு இந்தியாவின் பண்டைய பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களின் தனித்துவமான கலவையை வெளிப்படுத்தவும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு தளமாக செயல்பட்டது. ஏ.வி.ஜி.சி(அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்) துறையில் ஒத்துழைப்பு மற்றும் புதுமையை வளர்ப்பதற்காக வேவ்ஸ் 2025 இல் வந்து பங்கேற்க திரைப்படத் துறையைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த அமர்வு அழைப்புவிடுத்தது.
நிகழ்ச்சியில் பேசிய மூத்த இயக்குநரும் நடிகருமான திரு சேகர் கபூர், இந்திய பொழுதுபோக்குத் துறையின் அபரிமிதமான திறனை வலியுறுத்தி எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்தினார். இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள படைப்பாளிகளுக்கு உலகளாவிய தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று அவர் கூறினார். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஏ.வி.ஜி.சி-எக்ஸ்.ஆர் (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டென்டெட் ரியாலிட்டி) துறையுடன் ஒத்துழைக்க சர்வதேச தொழில்துறை தலைவர்களுக்கு வேவ்ஸ் ஒரு சிறந்த வாய்ப்பு என்று அவர் விவரித்தார்.
இந்தியாவின் தொழில்நுட்ப உத்வேகத்தை வலியுறுத்திய திரு கபூர், தொழில்நுட்பத் துறையில் உலகத் தலைமையாக இந்தியா உருவாகத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். நீடித்த வளர்ச்சி மற்றும் புதுமையுடன், இந்திய நிறுவனங்கள் விரைவில் உலகின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
கதைசொல்லலின் சாராம்சம் குறித்துப் பேசிய புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர், கேட்பவரின் கண்ணோட்டத்தில் இருந்து கதைகளை வெளிப்படுத்துவதில் கலை உள்ளது என்று வலியுறுத்தினார்.
கதைசொல்லலுக்கு வெவ்வேறு ஊடகங்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103652
****************
BR/KV
(Release ID: 2103757)
Visitor Counter : 18