தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு, ஐஇஐசி இணைந்து கேமிங் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்துகின்றன
प्रविष्टि तिथि:
15 FEB 2025 5:32PM
|
Location:
PIB Chennai
கேமிங் துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கென ஒரு போட்டி நடத்தப்படுகிறது. உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டையொட்டி (வேவ்ஸ்) டெக் ட்ரையம்ப் சீசன் 3 என்ற போட்டி நடத்தப்படுகிறது. இத்துறையில் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை இது வழங்குகிறது! இதற்கான விண்ணப்ப காலக்கெடு பிப்ரவரி 20, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கேமிங் போட்டியின் வெற்றியாளர்கள் மார்ச் 17 முதல் 21, 2025 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள கேம் டெவலப்பர்கள் மாநாடு (GDC) -2025-ல் தங்கள் தயாரிப்பு, ஐபி, தொழில்நுட்பம் ஆகியவற்னை காட்சிப்படுத்துவதற்க வாய்ப்பைப் பெறுவார்கள்.
டெக் ட்ரையம்ப் (Tech Triumph) திட்டம்:
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் (எம்ஐபி) இணைந்து, பொழுதுபோக்கு கண்டுபிடிப்பு கவுன்சில் (ஐஇஐசி) கிரியேட் இன் இந்தியா சேலஞ்ச்சின் ஒரு பகுதியாக டெக் ட்ரையம்ப் திட்டத்தை (டிடிபி) அறிமுகப்படுத்தியுள்ளது. வேவ்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இது நடத்தப்படுகிறது.
டெக் ட்ரையம்ப் சீசன் 3க்கு (Tech Triumph Season 3) ஏற்கனவே 1,000 க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் தகவலுக்கு: https://www.thetechtriumph.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
***
PLM/KV
रिलीज़ आईडी:
2103602
| Visitor Counter:
72