தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மஹாகும்பமேளா 2025: மஹி பூர்ணிமாவின் நான்காவது அமிர்த நீராடலின் போது திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

Posted On: 12 FEB 2025 11:34PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய ஆன்மீகம் மற்றும் கலாச்சார நிகழ்வான மஹாகும்பமேளா 2025-ல், இன்று மஹி பூர்ணிமாவின் புனித நிகழ்வில் நான்காவது அமிர்த நீராடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பிரயாக்ராஜில் உள்ள புனித திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

இந்தியர்களுடன், கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டு பக்தர்களும் அமிர்த நீராடலில் பங்கேற்றனர். மாநில அரசு வெளியிட்ட தரவுகளின்படி, மஹி பூர்ணிமா அன்று மாலை 6 மணிக்கு மொத்தம் 1.90 கோடி பக்தர்கள் புனித நீராடியிருந்தனர்.

இந்து நாட்காட்டியின்படி, இந்தப் புனித நாளில் நீராடுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதனால்தான் இரவில் இருந்து சங்கமத்தில் நீண்ட வரிசைகள் உருவாகி இருந்தன. மஹி பூர்ணிமா அன்று புனித நீராடுவதற்கான நேரம் பிப்ரவரி 11-ம் தேதி மாலை 6:55 மணிக்குத் தொடங்கி பிப்ரவரி 12-ம் தேதி இரவு 7:22 மணிக்கு முடிந்தது.

பக்தர்கள் அனைவரும் எந்தச் சிரமமும் இல்லாமல்  இருக்க, மகாகும்பமேளா நிர்வாகம் மேளா மைதானம் முழுவதும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.  பக்தர்கள் நீராடிய பிறகு படித்துறைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும், விரைவாக தங்கள் இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்த முயற்சிகள் மஹி பூர்ணிமா நீராடலை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சுமூகமான நிகழ்வாக மாற்றியது.

 

பக்தர்களின் அதிக எண்ணிக்கையில் வருகை புரிந்ததை நிர்வகிக்கவும், புனித நீராடலுக்குப் பிறகு அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்யவும், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மேளா பகுதி முழுவதும் பெரிய திரையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மஹி பூர்ணிமா அன்று, கல்பவாசிகள் பிரம்ம முகூர்த்தத்தின் போது திரிவேணியில் இறுதி நீராடினர். பின்னர் தங்கள் முகாம்களுக்குத் திரும்பினர். தங்கள் சடங்குகளைச் செய்த பிறகு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கல்பவாசிகள் மகாகும்ப மேளாவிலிருந்து விடைபெற்று தங்கள் இருப்பிடங்களுக்குப் பயணத்தைத் தொடங்கினர். கல்பவாசிகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக மஹாகும்ப நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அவை திறம்பட செயல்படுத்தப்பட்டன.

மஹாகும்பமேளா நிர்வாகம், உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை, துப்புரவுப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், படகு ஓட்டுநர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் மஹாகும்ப பூர்ணிமா நீராடல் விழாவின் வெற்றி சாத்தியமானது. அவர்கள் இந்த வரலாற்று நிகழ்வு பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய அயராது உழைத்தனர்.

***

(Release ID: 2102556)
TS/PKV/RR/KR


(Release ID: 2102632) Visitor Counter : 22