தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறும்படத் தயாரிப்பாளர்கள், தொழில்முறை விளம்பரப்பட தயாரிப்பாளர்கள் பிரபலங்களாக திகழ வேவ்ஸ் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது

Posted On: 12 FEB 2025 6:46PM by PIB Chennai

வேவ்ஸ் விருதுகளுக்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் மாணவர் தயாரிக்கும்  குறும்படம், தொழில்முறை விளம்பரப் படப் போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பிப்ரவரி 15 -ம் தேதிக்குள் உங்கள் பதிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச திரைப்பட சங்கம் இந்தியாவுடன் இணைந்து,  இந்தியாவில் படைப்புத்திறன் போட்டியின் ஒரு பகுதியாக வேவ்ஸ் விருதுகளுக்கான சிறப்பு விருதுகளை வழங்குகிறது.

இரண்டு போட்டி பிரிவுகள் உள்ளன: மாணவர் தயாரிக்கும் குறும்படம் (காலவரம்பு கட்டுப்பாடு இல்லை) மற்றும் தொழில்முறை விளம்பரப் படங்கள் (காலவரம்பு 60 வினாடிகள்).

நவீன சூழலில் புராணங்களும் நாட்டுப்புறக் கதைகளும்

நிலைத்தன்மை மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு

ஆரோக்கியம் மற்றும் யோகா

செயற்கை நுண்ணறிவு & கதைசொல்லலின் எதிர்காலம்

அனிமேஷன் & விஎப்எக்ஸ் மூலம் இந்தியாவின் கூறப்படாத கதைகள்

சமூக தாக்கத்திற்கான விளையாட்டு

மெய்நிகர் தயாரிப்பு  மற்றும் எக்ஸ்ஆர் புதுமை கண்டுபிடிப்புகள்

பெண்கள் பாதுகாப்பும், ஈவ் டீசிங்கும்

விளம்பர உலகம் மற்றும் அதன் மாறிவரும் பரிமாணங்கள் போன்ற தலைப்பில் இந்தியாவின் சமூக கலாச்சார முறை மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102429

***

TS/IR/AG/DL


(Release ID: 2102471) Visitor Counter : 39