சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யானைக்கால் நோய்க்கான தேசிய மருந்து வழங்கும் வருடாந்திர இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ பி நட்டா தொடங்கி வைத்தார்

Posted On: 10 FEB 2025 1:09PM by PIB Chennai

· நாட்டில் நிணநீர் யானைக்கால் நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 13 மாநிலங்களில் அத்தொற்றை அகற்றும் வகையில்நாடு முழுவதும் வருடாந்தர தேசிய தடுப்பு மருந்து வழங்கும் இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ பி நட்டா, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இந்த இயக்கத்தின் நோக்கங்கள், முக்கிய உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் பங்கேற்கும் மாநிலங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பாதிக்கப்பட்டுள்ள 13 மாநிலங்களைச் சேர்ந்த 111 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும். வீடு வீடாகச் சென்று நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

· இந்த இயக்கத்தின் மூலம் நாட்டிலிருந்து நிணநீர் யானைக்கால் நோயை முற்றிலும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பூச்சிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும். இந்த நோய் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு தனி நபருக்கும் நோய் எதிர்ப்பு மருந்து வழங்குவது உறுதி செய்யப்படும்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதார செயலாளர் திருமதி புன்ய  சலீலா ஸ்ரீவத்சவா உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101250

***

TS/SV/KPG/RR


(Release ID: 2101334) Visitor Counter : 30