உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானில் ஆச்சார்யா ஸ்ரீ வித்யாசாகர் ஜி மகராஜின் முதல் சமாதி ஸ்மிருதி மஹோத்ஸவத்தில் கலந்து கொண்டார்

Posted On: 06 FEB 2025 6:10PM by PIB Chennai

சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கானில் நடைபெற்ற ஸ்ரீ வித்யாசாகர் ஜி மகாராஜின் முதல் சமாதி ஸ்மிருதி மஹோத்சவத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 1008 சித்தசக்ர விதான் விஸ்வ சாந்தி மகாயக்ஞாவிலும் அமைச்சர் பங்கேற்றார். இந்த நிகழ்வின் போது, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ரூ.100 நினைவு நாணயம், 5 ரூபாய் சிறப்பு அஞ்சல் உறை, 108 கால்தடங்கள் மற்றும் ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் ஜியின் உருவப்படத்தை வெளியிட்டார். மேலும், சமாதி ஸ்மாரக் 'வித்யாயதன்' திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா மற்றும் பூஜ்ய முனி ஸ்ரீ சம்தா சாகர் ஜி மகாராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் ஜி மகாராஜ் ஒரு துறவி  மட்டுமல்ல, ஒரு புதிய சித்தாந்தத்தையும் புதிய சகாப்தத்தையும் தோற்றுவித்த ஒரு தொலைநோக்கு பார்வையாளர் என்று திரு அமித் ஷா கூறினார். கர்நாடகாவில் பிறந்த ஆச்சார்ய குரு ஸ்ரீ வித்யாசாகர் ஜி மகாராஜ், இந்தியக் கலாச்சாரம், இந்திய மொழிகள், இந்திய அடையாளத்தை நாடு முழுவதும் பரப்பினார் என்று அவர் கூறினார். உலகம் முழுவதும் மதத்தின் விளக்கத்துடன் தேசிய அடையாளத்தைப் பரப்புவதற்குப் பணியாற்றிய ஒரு மதத் துறவி மிகவும் அரிதானவர் என்றும் திரு ஷா கூறினார். ஆச்சார்ய வித்யாசாகர் ஜியின் வாழ்க்கையானது மதம், கலாச்சாரம் மற்றும் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று திரு அமித் ஷா கூறினார்.

திரு அமித் ஷா, ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் ஜியை பலமுறை சந்திக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். ஆச்சார்ய ஜி எப்போதும் இந்திய மொழிகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், இந்தியாவின் பெருமை மற்றும் அடையாளத்தை உலகளவில் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகவும், நமது நாட்டை 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்று அழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாகத் தெரிவித்தார்.

ஜி-20 உச்சிமாநாட்டின் அழைப்பிதழில் 'பாரதப் பிரதமர்' என்று எழுதுவதன் மூலம், பிரதமர் மோடி வித்யாசாகர் ஜியின் கருத்துக்களைச் செயல்படுத்தினார் என்று திரு அமித் ஷா கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி, எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் ஆச்சார்யாஜியின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியதாகவும், அவரது செய்தியை நடைமுறையில் பின்பற்றியதாகவும் அவர் கூறினார்.

ஆச்சார்யா ஜி தனது வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை துறவறப் பாதையை விட்டு வெளியேறவில்லை என்று கூறினார். ஆச்சார்யா ஜி தனது ஆன்மீக ஆற்றலால் ஜைன மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்லாமல், ஜைன மதத்தைச் சேராதவர்களுக்கும் இரட்சிப்பின் பாதையைக் காட்டினார் என்று திரு ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100378

***

TS/PKV/DL


(Release ID: 2100433) Visitor Counter : 57